|
|
|
|
விண்ணப்பம்
சித்தர்
வாஸ்து சாஸ்திர
சேவையைப்பெறுவதற்கான
விண்ணப்பப்படிவம்
காகபுஜண்டர்
குருகோயில் பற்றிய
விபரங்களைப் பெற
இங்கு தொடவும்
காகபுஜண்டர்
குருகோயில் குடழுக்கு
விழா புகைப்படங்கள்.
வாஸ்து சாஸ்திரம்
– அறிமுகம்
வாஸ்து என்னும்
வடமொழிக்கு உண்மை
என்று பொருள்.
வளம் பெருக்கும்
உண்மை விஞ்ஞானத்திற்கு
வாஸ்து சாஸ்திரம்
என்று பெயர். வாஸ்து
சாஸ்திரம் என்பது
கட்டிடக்கலைப்பற்றிய
நுண்விஞ்ஞானமாகும்.
பூமியின் இயற்கைத்தத்துவங்களை
அடிப்படையாகக்கொண்டு
எட்டுதிக்குகளையும்
ஒன்பது பாங்களையும்
உள்ளடக்கிய கட்டிடத்தின்
மீதும் அதைச்சுற்றியும்
தாக்கம் செய்யும்
நவகிரகங்களின்
ஒளிச்சிதறல்களின்
குணாதிசயங்களைத்தொடர்புபடுத்தி நல்லுயிரூட்டம்
செய்து
‘கட்டிடம்‘ என்னும்
உடலை இவ்வுலகில்
படைத்து நல்லருளுடன்
வாழ வகைசெய்யும்
பிரம்ம படைப்பின்
நுண்பொறியியல்
விஞ்ஞானமே வாஸ்து சாஸ்திரமாகும்.
சித்தர் வாஸ்து சாஸ்திரம் - அறிமுகம்
சித்தர்கள்
என்போர் தேவர்களின்
ஒரு பிரிவினர்
ஆகும்.எட்டு வகையான
அபூர்வ சித்திகளைக்கொண்டவர்கள்
சித்தர்களாவார்கள்.
சித்தர்களால்
அருளப்பட்ட கட்டிட
நுண்கலைப்பற்றிய
தெய்வீக விஞ்ஞானம்
சித்தர் வாஸ்து
சாஸ்திரமாகும்.
கட்டிடத்தை இடிக்காமலும், கட்டிட
அமைப்பு லட்சணங்களில்
எவ்விதமாற்றங்களும்
செய்யாமலும், சித்தர்களின்
நுண்கலைகளான அபூர்வ
மூலிகைகள், மூலிகைச்சக்கரங்கள்
மற்றும் சித்தர்
குளிகைகள் (ரசமணிகள்)
போன்ற மாற்றுச்சிறப்பம்சங்களின்
மூலம் கட்டிடத்திலுள்ள
வாஸ்து குறைபாடுகளை
நீக்கி வளமான வாழ்வு
பெறுவதற்கு வழிகாட்டும்
தெய்வீக விஞ்ஞானம்
சித்தர் வாஸ்து
சாஸ்திரமாகும்.
பஞ்ச சக்திகளாக
விளங்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று
மற்றும் ஆகாயம்
என்னும் பஞ்சபூத
சக்திகளின் கூறுகளாகிய
நவகிரகங்களின்
சக்திகளை சித்தர்களின்
தெய்வீகப்பொருள்களின்
மூலம் உயர்நிலைப்படுத்தி
கட்டிடத்தில்
மையம் கொள்ளச்செய்து
கட்டிடத்திற்கு
சர்வ வளன்களையும்
சேர்க்கும் அபூர்வ
தெய்வீக விஞ்ஞானமே “ சித்தர்
வாஸ்து சாஸ்திரமாகும் “
சித்தர் வாஸ்து
சாஸ்திரப்படி
ஒரு குடியிருக்கும்
கட்டிடத்திற்கு
வாஸ்து குறைபாடுகளை
நீக்கி வளன்களைக்கூட்டும்
லட்சணங்களின் நிர்ணயம்
அருள்குரு
காகபுஜண்டர் தன்னுடைய
சீடராகிய கோரக்கச்சித்தருக்கு
அருளிய ஓலைச்சுவடி
சித்தர் நூலான
” ஸ்ரீ காகபுஜண்டர்
மனை லட்சணாமிர்தம்
– 7000 ” என்னும்
சித்தர் வாஸ்து
சாஸ்திர நூலில், சித்தர்
வாஸ்து சாஸ்திரப்படி
ஒரு கட்டிடத்தின்
வாஸ்து குறைபாடுகளை
நீக்கி வளன்களைக்கூட்டுவதற்கு
மூன்று மார்க்கங்களை
உபதேசித்துள்ளார். அவையாவன
:
1.சித்தர்
மூலிகை முறை 2. சித்தர் மூலிகைச்சக்கர
முறை 3. சித்தர் குளிகை
(ரசமணி) முறை என்பனவாகும்.
மேற்கண்ட அனைத்து
முறைகளும் ஒன்றைவிட
மற்றொன்று உயர்வான
பலன்களைக் கொடுப்பதாகும்.
நாம் இப்பொழுது
ஒவ்வொரு முறைகள்
பற்றியும் விரிவாகக்காண்போம்.
1.சித்தர்
மூலிகை முறை
சித்தர்களின்
அபூர்வ மூலிகைகளை
கட்டிடத்தினுள்
வளர்ப்பதின் மூலம்
பஞ்ச சக்திகளின்
கூறுகளாகிய நவகிரங்களின்
சக்திகளை உயர்நிலைப்படுத்தி
கட்டிடத்தில்
மையங்கொள்ளச்செய்து
கட்டிடத்தின்
குறைபாடுகளை நீக்கி
கட்டிடத்தை வளப்படுத்தி
அதன் மூலம் கட்டிடத்தில்
வாழும் உயிர்களின்
வாழ்வை வளப்படுத்தும்
தெய்வீக முறை சித்தர்
மூலிகை முறையாகும்.
இந்த முதல்வகை
முறையின் மூலம்
அவரவர்களின் ஊழ்வினைப்படி
ஐம்பது விழுக்காடுகள்
அளவிற்கு வாஸ்து
வளன்களைப்பெற்று
நலம்பெற முடியும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும்
1008 வகையான
ஜீவ(உயிருள்ள)
மூலிகைகள் சித்தர்
நூலில் சொல்லப்பட்டுள்ளது
இருப்பினும் உதாரணத்திற்காக
ஒவ்வொரு கிரகங்களுக்கும்
ஒன்பது வகையான
ஜீவ மூலிகைகளின்
விவரங்களை மட்டும்
இப்பொழுது காண்போம்.
ரவிவிருட்சம், சங்கரவிருட்சம், அலரிவேம்பு, அண்டவிருட்சம், வேங்கைக்கரணி, தேவருத்திரவிருட்சம், வெள்ளெருக்கு, செந்நாவல்
மற்றும் சூரியபாணம்
போன்ற மூலிகைகள்
சூரியபகவானுக்குரிய
அபூர்வ மூலிகைகளாகும்.
வெண்வேம்பு, சுந்தரிகற்பம், நாதவிருட்சம், வெள்ளவுரி, துர்க்கைக்கரணி, வெண்நாவல், வெண்வேம்பு, வெண்புங்கன்
மற்றும் வெண்முருக்கு
போன்ற மூலிகைகள்
சந்திரபகவானுக்குரிய
அபூர்வ மூலிகைகளாகும்.
சத்தியகரணை, வேல்விருட்சம், கஸ்தூரிவிருட்சம், செவ்வவுரி, ஞானக்கரணி, மகாவில்வம், செம்மாவிருட்சம், கருங்காலிவிருட்சம்
மற்றும் செண்பகவிருட்சம்
போன்ற மூலிகைகள்
செவ்வாய் பகவானுக்குரிய
அபூர்வ மூலிகைகளாகும்.
நாராயணவிருட்சம், கோதண்டவிருட்சம், கருநெல்லி, மறைமூலி, பூதக்கரணி, கருநாயுருவி, கருந்துளசி, கருணைவிருட்சம்
மற்றும் சங்குவிருட்சம்
போன்ற மூலிகைகள்
புதபகவானுக்குரிய
அபூர்வ மூலிகைகளாகும்.
பொற்சீந்தில், கயல்விருட்சம், வேதச்சாரளை, உண்ணாவிருட்சம், சித்தர்கற்பம், திருநீற்றுப்பத்திரி, அரசவிருட்சம், முல்லைவிருட்சம்
மற்றும் வித்யாவிருட்சம்
போன்ற மூலிகைகள்
குருபகவானுக்குரிய
அபூர்வ மூலிகைகளாகும்.
சக்திவிருட்சம், மோகினிவிருட்சம், காமவிருட்சம், போகவிருட்சம், ஆசனவிருட்சம், அத்திவிருட்சம், சந்தனவிருட்சம், வெண்டாமரைமூலி
மற்றும் காமாட்சிவிருட்சம்
போன்ற மூலிகைகள்
சுக்கிரபகவானுக்குரிய
அபூர்வ மூலிகைகளாகும்.
நீலவேம்பு, அஞ்சனைவிருட்சம், கரும்புங்கன், இரும்புக்கொடி, அரனார்விருட்சம், வன்னிவிருட்சம், மகிழம்விருட்சம், கருங்குவளை
விருட்சம் மற்றும்
மந்தாரை விருட்சம்
போன்ற மூலிகைகள்
சனி பகவானுக்குரிய
அபூர்வ மூலிகைகளாகும்.
கறுஞ்சீந்தில், கார்கோடகவிருட்சம், கல்லரவுவிருட்சம், பணிக்கொடி, மகாவல்லாரை, மருதவிருட்சம், கடம்புவிருட்சம், அறுகுவிருட்சம்
மற்றும் மோட்சவிருட்சம்
போன்ற மூலிகைகள்
ராகுபவானுக்குரிய
அபூர்வ மூலிகைகளாகும்.
பிரம்மவிருட்சம், ஞானிவிருட்சம், கோதைவிருட்சம், எழில்விளம்பிவிருட்சம், மதியூக்கி, தேவதர்ப்பை, பஞ்சாட்சரமூலி, யோகவிருட்சம்
மற்றும் செம்பணி
விருட்சம் போன்ற
மூலிகைகள் கேது
பகவானுக்குரிய
அபூர்வ மூலிகைகளாகும்.
2. சித்தர்
மூலிகைச்சக்கர
முறை
சித்தர்களின்
அபூர்வ மூலிகைச்சக்கரங்களை
கட்டிடத்தில்
உரிய இடத்தில்
பதிப்பதின் மூலம்
பஞ்ச சக்திகளின் கூறுகளாகிய
நவகிரகங்களின்
சக்திகளை உயர்வுபடுத்தி
கட்டிடத்தில்
மையங்கொள்ளச்செய்து
கட்டிடத்தின்
குறைபாடுகளை நீக்கி
கட்டிடத்தை வளப்படுத்தி
அதன் மூலம் அக்கட்டிடத்தில்
வாழும் உயிர்களின்
வாழ்வை வளப்படுத்தும்
தெய்வீக முறை சித்தர்
மூலிகைச்சக்கர
முறையாகும். இந்த
இரண்டாம் வகை முறை
மூலம் அவரவர்களின்
ஊழ்வினைப்படி
எழுபது விழுக்காடுகள்
அளவிற்கு வாஸ்து
வளன்களைப்பெற்று
நலம்பெற முடியும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும்
பலவகையான மூலிகை
மரங்கள் சித்தர்
நூலில் சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் எளிதாகக்கிடைக்கக்கூடிய
ஒவ்வொரு கிரகத்திற்குமுண்டான
ஒன்று அல்லது இரண்டு
வகைகளைக்கொண்ட
மூலிகை மரங்களைக்கொண்டு
செய்யப்படும்
மூலிகைச்சக்கரங்களைப்பற்றி
நாம் இப்பொழுது
காண்போம்.
சூரிய பகவானுக்குரிய
மூலிகை மரம் உருத்திராட்ச
மரமாகும். உருத்திராட்ச
மரத்தில் சூரியனுக்கு
உரிய பீடாட்சர
அமைப்புகளுடன்
சக்கரங்கள் வரைந்து
கட்டிடத்தின்
கிழக்கு திக்கில்
கட்டிடத்தின்
வெளிபாகத்தில்
ஆவரணத்தின் கிழக்கு
திக்கை நோக்கியவாறு
கட்டிடத்தின்
மொத்த உயரத்தில்
மையம் செய்து சூரிய
பகவானின் மூலிகைச்சக்கரம்
பதிக்கப்படவேண்டும். ஆயிரத்துஎட்டு
உரு மந்திர தீட்சையும், உரிய குருதீட்சையும்
ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம்
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
ஞயிற்றுக்கிழமையில்
கட்டிடக்கர்த்தாவின்
பட்சி (பஞ்சபட்சி)
ஆட்சி செய்யும்
காலத்தில் கட்டிடத்தில்
பதிக்கப்படவேண்டும்.
சந்திரபகவானுக்குரிய
மூலிகை மரம் வேம்பு
மரமாகும். வேம்பு
மரத்தில் சந்திரனுக்கு
உரிய பீடாட்சர
அமைப்புகளுடன்
சக்கரங்கள் வரைந்து
கட்டிடத்தின்
வடமேற்கு மூலையில்
கட்டிடத்தின்
வெளிபாகத்தில்
ஆவரணத்தின் வடமேற்கு
திக்கை நோக்கியவாறு
கட்டிடத்தின்
மொத்த உயரத்தில்
மையம் செய்து சந்திரபகவானின்
மூலிகைச்சக்கரம்
பதிக்கப்படவேண்டும். ஆயிரத்து
எட்டு உரு மந்திர
தீட்சையும், உரிய குரு
தீட்சையும் ஏற்றப்பட்ட
மூலிகைச்சக்கரம்
குரு முகாந்திரமாகப்பெறப்பட்டு
திங்கள் கிழமையில்
கட்டிடக்கர்த்தாவின்
பட்சி (பஞ்சபட்சி)
ஆட்சி செய்யும்
காலத்தில் கட்டிடத்தில்
பதிக்கப்படவேண்டும்.
செவ்வாய் பகவானுக்குரிய
மூலிகை மரம் வில்வ
மரமாகும். வில்வ
மரத்தில் செவ்வாய்பகவானுக்கு
உரிய பீடாட்சர
அமைப்புகளுடன்
சக்கரங்கள் வரைந்து
கட்டிடத்தின்
தெற்கு திக்கில்
கட்டிடத்தின்
வெளிபாகத்தில்
ஆவரணத்தின் தெற்கு
திக்கை நோக்கியவாறு
கட்டிடத்தின்
மொத்த உயரத்தில்
மையம் செய்து செவ்வாய்
பகவானின் மூலிகைச்சக்கரம்
பதிக்கப்படவேண்டும். ஆயிரத்து
எட்டு உரு மந்திர
தீட்சையும், உரிய குரு
தீட்சையும் ஏற்றப்பட்ட
மூலிகைச்சக்கரம்
குருமுகாந்திரமாகப்
பெறப்பட்டு செவ்வாய்
கிழமையில் கட்டிடக்கர்த்தாவின்
பட்சி(பஞ்சபட்சி)
ஆட்சி செய்யும்
காலத்தில் கட்டிடத்தில்
பதிக்கப்படவேண்டும்.
புதபகவானுக்குரிய
மூலிகை மரம் ஆலமரமாகும்.
ஆலமரத்தில் புதபகவானுக்குரிய
பீடாட்சர அமைப்புகளுடன்
சக்கரங்கள் வரைந்து
கட்டிடத்தின்
வடக்கு திக்கில்
கட்டிடத்தின்
வெளிபாகத்தில் ஆவரணத்தின்
வடக்கு திக்கை
நோக்கியவாறு கட்டிடத்தின்
மொத்த உயரத்தில்
மையம் செய்து புதபகவானின்
மூலிகைச்சக்கரம்
பதிக்கப்படவேண்டும்.
ஆயிரத்து எட்டு
உரு மந்திர தீட்சையும், உரிய குரு
தீட்சையும் ஏற்றப்பட்ட
மூலிகைச்சக்கரம்
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
புதன் கிழமையில்
கட்டிடக்கர்த்தாவின்
பட்சி(பஞ்சபட்சி)
ஆட்சி செய்யும்
காலத்தில் கட்டிடத்தில்
பதிக்கப்படவேண்டும்.
குருபகவானுக்குரிய
மூலிகை மரம் அரசன்
மற்றும் சந்தன
மரமாகும். அரசன்
அல்லது சந்தன மரத்தில்
குருபகவானுக்குரிய
பீடாட்சர அமைப்புகளுடன்
சக்கரங்கள் வரைந்து
கட்டிடத்தின்
வடகிழக்கு மூலையில்
கட்டிடத்தின்
வெளிபாகத்தில்
ஆவரணத்தின் வடகிழக்கு
மூலையை நோக்கியவாறு
கட்டிடத்தின்
மொத்த உயரத்தில்
மையம் செய்து குருபகவானின்
மூலிகைச்சக்கரம்
பதிக்கப்படவேண்டும்.
ஆயிரத்து எட்டு
உரு மந்திர தீட்சையும், உரிய குரு
தீட்சையும் ஏற்றப்பட்ட
மூலிகைச்சக்கரம்
குரு முகாந்திரமாகப்பெறப்பட்டு
வியாழன் கிழமையில்
கட்டிடக்கர்த்தாவின்
பட்சி(பஞ்சபட்சி)
ஆட்சி செய்யும்
காலத்தில் கட்டிடத்தில்
பதிக்கப்படவேண்டும்
சுக்கிரபகவானுக்குரிய
மூலிகை மரம் அத்தி
மரமாகும். அத்தி
மரத்தில் சுக்கிரபகவானுக்குரிய
பீடாட்சர அமைப்புகளுடன்
சக்கரங்கள் வரைந்து
கட்டிடத்தின்
தென்கிழக்கு மூலையில்
கட்டிடத்தின்
வெளிபாகத்தில்
ஆவரணத்தின் தென்கிழக்கு
மூலையை நோக்கியவாறு
கட்டிடத்தின்
மொத்த உயரத்தில்
மையம் செய்து சுக்கிரபகவானின்
மூலிகைச்சக்கரம்
பதிக்கப்படவேண்டும்.
ஆயிரத்து எட்டு
உரு மந்திர தீட்சையும், உரிய குரு
தீட்சையும் ஏற்றப்பட்ட
மூலிகைச்சக்கரம்
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
வெள்ளிக்கிழமையில்
கட்டிடக்கர்த்தாவின்
பட்சி(பஞ்சபட்சி)
ஆட்சி செய்யும்
காலத்தில் கட்டிடத்தில்
பதிக்கப்படவேண்டும்.
சனி பகவானுக்குரிய
மூலிகை மரம் வன்னி
மரமாகும். வன்னி
மரத்தில் சனிபகவானுக்குரிய
பீடாட்சர அமைப்புகளுடன்
சக்கரங்கள் வரைந்து
கட்டிடத்தின்
மேற்குதிக்கில்
கட்டிடத்தின்
வெளிபாகத்தில்
ஆவரணத்தின் மேற்கு
திக்கை நோக்கியவாறு
கட்டிடத்தின்
மொத்த உயரத்தில்
மையம் செய்து சனிபகவானின்
மூலிகைச் சக்கரம்
பதிக்கப்படவேண்டும். ஆயிரத்து
எட்டு உரு மந்திர
தீட்சையும், உரிய குரு
தீட்சையும் ஏற்றப்பட்ட
மூலிகைச்சக்கரம்
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
சனிக்கிழமையில்
கட்டிடக்கர்த்தாவின்
பட்சி(பஞ்சபட்சி)
ஆட்சி
செய்யும் காலத்தில்
கட்டிடத்தில்
பதிக்கப்படவேண்டும்.
ராகு பகவானுக்குரிய
மூலிகை மரம் மருதமரமாகும். மருதமரத்தில்
ராகு பகவானுக்குரிய
பீடாட்சர அமைப்புகளுடன்
சக்கரங்கள் வரைந்து
கட்டிடத்தின்
தென்மேற்கு மூலையை
நோக்கியவாறு கட்டிடத்தின்
மொத்த உயரத்தில்
மையம் செய்து ராகுபகவானின்
மூலிகைச்சக்கரம்
பதிக்கப்படவேண்டும்.
ஆயிரத்து
எட்டு உரு மந்திர
தீட்சையும், உரிய குரு
தீட்சையும் ஏற்றப்பட்ட
மூலிகைச்சக்கரம்
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
சனிக்கிழமையில்
கட்டிடக்கர்த்தாவின்
பட்சி (பஞ்சபட்சி)
ஆட்சி செய்யும்
காலத்தில் கட்டிடத்தில்
பதிக்கப்படவேண்டும்.
கேது பகவானுக்குரிய
மூலிகை மரம் மாமரமாகும்.
மாமரத்தில் கேதுபகவானுக்குரிய
பீடாட்சர அமைப்புகளுடன்
சக்கரங்கள் வரைந்து
கட்டிடத்தின்
மையத்தில் தரைமட்டத்திற்கு
சற்று கீழ்பாகத்தில்
பதிக்கப்படவேண்டும்.
ஆயிரத்து எட்டு
உரு மந்திர தீட்சையும், உரிய குரு
தீட்சையும் ஏற்றப்பட்ட
மூலிகைச்சக்கரம்
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
செவ்வாய் கிழமையில்
கட்டிடக்கர்த்தாவின்
பட்சி(பஞ்சபட்சி)
ஆட்சி செய்யும்
காலத்தில் கட்டிடத்தில்
பதிக்கப்படவேண்டும்.
3. சித்தர் குளிகை முறை (ரசமணிமுறை)
சித்தர்களின்
அபூர்வ சித்தர்
குளிகையை (ரசமணியை)
கட்டிடத்தினுள்
வைப்பதின் மூலம்
பஞ்ச சக்திகளின்
கூறுகளாகிய நவகிரகங்களின்
சக்திகளை உயர்வுபடுத்தி
கட்டிடத்தில்
மையங்கொள்ளச்செய்து
கட்டிடத்தின்
குறைபாடுகளை நீக்கி
கட்டிடத்தை வளப்படுத்தி
அதன் மூலம் கட்டிடத்தில்
வாழும் உயிர்களின்
வாழ்வை வளப்படுத்தும்
தெய்வீகமுறை சித்தர்குளிகை
முறையாகும். இந்த
முன்றாம் வகை முறை
மூலம் அவரவர்களின்
ஊழ்வினைப்படி
தொன்னூறு விழுக்காடுகள்
அளவிற்கு வாஸ்து
வளன்களைப்பெற்று
உயிர்கள் நலமுடன்
வாழமுடியும்.
சித்தர் குளிகை
முறையில் ஒரு கட்டிடத்திற்கு
வாஸ்து வளன்கள்
கூட்டப்பெற்றால்
அக்கட்டிடம் இந்திரபோக
வாழ்வைக் கொடுக்கும்
என்பதில் எந்தவித
சந்தேகமுமில்லை.
“சித்தர்
குளிகை” (ரசமணி) என்பது
சித்தர்களால்
சிவனின் விந்தணு< என்று அழைக்கப்படும்
தூய்மை செய்யப்பட்ட
பாதரசத்துடன்
நாதம் என்று அழைக்கப்படும்
தூய்மை செய்யப்பட்ட
பல்வேறு விதமான
மூலிகைச்சக்திகளைச்சேர்த்து
பரபிரம்ம சொரூபமாக
ஆக்கப்படும் பரிபூரண
பரமாத்ம உயிர்ப்பொருளாகும்.
ஸ்ரீ காகபுஜண்டர்
மனை லட்சணாமிர்தம்
-7000 என்னும்
சித்தர் வாஸ்து
சாஸ்திர நூலில்
ஒன்பது வகையான
சித்தர் குளிகைளை
குருநாதர் குறிப்பிட்டுள்ளார்.
அவையாவன:
1. தேவ கமலினி
2. சங்கர கமலினி
3. வேத கமலினி
4. அகத்தியர்
கமலினி
5. கோரக்கர்
கமலினி
6. கருட கமலினி
7. ஜீவ கமலினி
8. ஆதி கமலினி
9. கந்தக கமலினி
மேற்கண்ட அனைத்து
சித்தர் குளிகைகளும்
ஒன்றைவிட மற்றொன்று
உயர்வான பலன்களைத்தருவதாகும்.
குருமுகாந்திரமாக
தெய்வீக நம்பிக்கையுடன்
குளிகைகளைப்பெற்று
பயன்படுத்தினால்
நற்பலன்கள் பெறுவது
திண்ணம்.
சித்திர வாஸ்து
சாஸ்திரப்படி
ஒரு ஆலயக்கட்டிடத்திற்கு
வாஸ்து குறைபாடுகளை
நீக்கி வளன்களைக்கூட்டும்
லட்சணங்களின்
நிர்ணயம்.
அருள்குரு
காகபுஜண்டர் தன்னுடைய
சீடராகிய கோரக்கச்சித்தருக்கு
அருளிய ஓலைச்சுவடி
நூலான “ஸ்ரீ காகபுஜண்டர்
மனை லட்சணாமிர்தம்
-7000 ” என்னும்
சித்தர் வாஸ்து
சாஸ்திர நூலில்
தேவாலயங்களின்
வாஸ்து குறைபாடுகளை
நீக்கி அவ்விடத்தில்
தெய்வீக ஆற்றலைப்பெருக்குவதற்கான
மூன்று மார்க்கங்களை
உபதேசித்துள்ளார். அவையாவன:
(1) சித்தர்
மூலிகை முறை (2) சித்தர்
குளிகை முறை (3) சித்தர்
பாஷாணக்கட்டு
முறை என்பனவாகும்.
1. சித்தர்
மூலிகை முறை
சித்தர்களின்
அபூர்வ மூலிகைகளை
ஆலயத்தினுள் வளர்ப்பதின்
மூலம் அவ்வாலயத்தின்
அருளாற்றலைப்பெருக்கும்
தெய்வீக மார்க்கம்
சித்தர் மூலிகை
மார்க்கமாகும். இந்த முதல்
வகை முறை மூலம்
ஒரு ஆலயத்தில்
ஐம்பது விழுக்காடுகள்
அளவிற்கு வாஸ்து
குறைபாடுகளை நீக்கி
வளன்களை ஏற்படுத்தலாம்.
ஆலயத்தின்
பிரதான தெய்வத்தையும்
அதைச்சுற்றி அமைந்துள்ள
பிற தெய்வங்களின்
சூட்சும குணங்களையும்
அவைகளை ஆட்சி செய்யும்
பிரதான கிரகங்கள்
மற்றும் உபகிரகங்கள்
மற்றும் சூட்சும
கிரகங்கள் ஆகியவைகளையும்
முழுமையாக ஆராய்ந்து
பிரதான தெய்வம்
முதலான பிற தெய்வங்கள்
அனைத்திற்கும் உரிய மூலிகைகளை
அறிந்து கொண்டு
அவைகளை முறைப்படுத்தி
ஆலயத்தின் ஈசானிய
பாகத்தில் வைத்து
வளர்க்க வேண்டும்.
ஆலயத்தின் ஈசானிய
பாகத்தில் வளர்க்கப்படும்
அனைத்து மூலிகைகளுக்கும்
முறைப்படி உயிர்
நிலைகள் ஏற்படுத்தப்பட்டு
முறைப்படி நித்ய
பூசைகள் செய்விக்கப்படவேண்டும்.
மேற்கண்டவாறு
செய்தால் ஆலயத்திலுள்ள
அனைத்து தோடங்களும்
நிவர்த்தியாகி
ஆலயத்தில் அமைந்துள்ள
தெய்வங்களுக்கு
ஆற்றல் மேம்பட்டு
உலக உயிர்களுக்கு
பெரும் நன்மையை
ஏற்படுத்தும்.
2. சித்தர் குளிகை முறை
சித்தர்களின்
அபூர்வ சித்தர்
குளிகைகளை (ரசமணியை)
ஆலயத்தில் மூலவரின்
முன்புறம் வைத்து
வழிபாடு செய்வதின்
மூலம் அவ்வாலயத்தின்
அருளாற்றலைப்பெருக்கும்
தெய்வீக மார்க்கம்
சித்தர் குளிகை
(ரசமணி) முறை மார்க்கமாகும்.
இந்த இரண்டாம்
வகை முறை மூலம்
ஒரு ஆலயத்தில்
எழுபது விழுக்காடுகள்
அளவிற்கு வாஸ்து
குறைபாடுகளை நீக்கி
வளன்களை ஏற்படுத்தலாம்.
ஆலயத்தின்
பிரதான தெய்வத்தின்
சூட்சும குணத்தையும்
அதை ஆளும் பிரதான
கிரகம் மற்றும்
உபகிரகம் மற்றும்
சூட்சும கிரகம்
ஆகியவைகளை முழுமையாக
ஆராய்ந்து அதற்குத்தக்கவாறு
உரிய தெய்வீக மூலிகைகளை
ஆராய்ந்து அவைகளின்
முழு சக்திகளையூட்டி
உருவாக்கப்பட்டு
குரு தீட்சை பெறப்பட்டு
முழுமையடைந்த
சித்தர் குளிகையை
(ரசமணியை) ஆலயத்தின்
பிரதான தெய்வத்தின்
முன்புறம் வைத்து
பூசை செய்தால்
அவ்வாலயத்தில்
அமைந்துள்ள பிரதான
தெய்வம் முதலான
அனைத்து தெய்வங்களுக்கும்
ஆற்றல் பெருகி
உலக உயிர்களுக்கு
பெரும் நன்மையை
ஏற்படுத்தும்.
3. சித்தர்
பாஷாணக்கட்டு
முறை
சித்தர்களின்
பாஷாணக்கட்டு
என்னும் அபூர்வ
மருந்துக்கட்டுகளால்
ஆலயத்தின் மூலவரை
சிறிய உருவில்
உருவாக்கி அவ்வாலயத்தின்
மூலவருக்கு முன்புறம்
வைத்து வழிபடுவதின்
மூலம் அவ்வாலயத்தின்
அருளாற்றலைப்பெருக்கும்
தெய்வீகமார்க்கம்
சித்தர் பாஷாணக்கட்டு
முறை மார்க்கமாகும்.
இந்த மூன்றாம்
வகை முறை மூலம்
ஒரு ஆலயத்தில்
தொன்னூறு விழுக்காடுகள்
அளவிற்கு வாஸ்து
வளன்களை ஏற்படுத்தலாம்.
ஆலயத்தின்
பிரதான தெய்வத்தின்
சூட்சும குணத்தையும்
அதை ஆளும் பிரதான, உப மற்றும்
சூட்சும கிரகங்களின்
உண்மையை ஆராய்ந்து
அவைகளுக்குண்டான
பாஷாணங்களை தனித்தனியே
சுத்தி செய்து
பிறகு குருமருந்து
மூலம் மூலவரின்
உருவத்தில் ஒன்றாகக்கட்டின
பிறகு முறையாக
குரு தீட்சை பெறப்பட்டு
முழுமையடைந்த
பாஷாணக்கட்டு
தெய்வச்சிலையை
மூலவருக்கு முன்புறம்
பிரதிட்டை செய்து
வழிபாடு செய்தால்
அவ்வாலயத்தில்
அமைந்துள்ள அனைத்து
தெய்வங்களுக்கும்
ஆற்றல் பெருகி
உலக உயிர்களுக்கு
பெரும் நன்மையை
ஏற்படுத்தும்.
சித்தர் வாஸ்து
சாஸ்திரப்படி
ஒரு கல்விச்சாலை
கட்டிடத்திற்கு
வாஸ்து குறைபாடுகளை
நீக்கி வளன்களைக்கூட்டும்
வட்சணங்களின்
நிர்ணயம்
சித்தர்
வாஸ்து சாஸ்திரப்படி
ஒரு கல்விச்சாலையின்
வாஸ்து குறைபாடுகளை
நீக்கி வளன்களைக்கூட்டுவதற்கு
அபூர்வ சித்தர்
குளிகை (ரசமணி)
முறை காகபுஜண்டரால்
உபதேசிக்கப்பட்டுள்ளது.
கல்விச்சாலைகளுக்கு
இரண்டு வகையான
சித்தர் குளிகைகளை
பூசை அறையில் வைத்து
வணங்க வேண்டும்
என்று சித்தர்
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவதான சித்தர்
குளிகையின் பெயர்
“கலைவாணி
கமலினி” என்னும்
சித்தர் குளிகையாகும், இந்த பொதுவான
சித்தர் குளிகை
அனைத்துக்கல்விச்சாலைகளுக்கும்
பொருந்தக்கூடியதாகும்.
இரண்டாவதான
சித்தர்குளிகையானது
அக்கல்விச்சாலையின்
சிறப்புக்கல்வியை
அடிப்படையாகக்கொண்டு
நிர்ணயிக்கப்படவேண்டும்.
கல்விச்சாலையின்
சிறப்புக்கல்வியை
ஆளும் கிரகத்தை
அடிப்படையாகக்கொண்டு
சிறப்பு நிலை சித்தர்
குளிகையை இரண்டாவது
சித்தர் குளிகையாகத்தேர்வு
செய்து அச்சிறப்புக்கல்வியின்
சூட்சுமத்திற்குத்தக்கவாறு
மூலிகை சத்துக்களின்
சாரங்களை ஏற்றி
உரிய ரசக்குளிகை
(ரசமணி) தயாரிக்கப்பட்டு
குருதீட்சையேற்றப்பட்டு
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
முறையாகக்கல்விச்சாலையின்
பூசை அறையில் வைத்து
வழிபாடு செய்யப்படவேண்டும்.
நவகிரகங்களின்
ஆளுகைக்குட்பட்ட
சிறப்புக்கல்வி
நிலைகளை அடிப்படையாகக்கொண்டு
அமைக்கப்படவேண்டிய
சிறப்பு சித்தர்
குளிகைகள் மற்றும்
உதாரணச்சிறப்புக்கல்விகளின்
விவரங்களை நாம்
இப்பொழுது காணலாம்.
ஆளும்
கிரகம் |
சித்தர்குளிகை |
உதாரணகல்வித்துறை |
சூரியன்
|
ரவிகலை
கமலினி |
ஆன்மீக
விஞ்ஞானம் |
சந்திரன்
|
மதிகலை
கமலினி |
மனோதத்துவம் |
செவ்வாய் |
சேய்கலை
கமலினி |
விவசாய
விஞ்ஞானம் |
புதன் |
புந்திகலை
கமலினி |
கணிணி
நுட்பம் |
குரு
|
பொன்கலை
கமலினி |
அரசியல்
விஞ்ஞானம் |
சுக்கிரன் |
பளிங்குகலை
கமலினி |
திரைப்படநுட்பம் |
சனி |
காரிகலை
கமலினி |
எந்திரப்பொறியியல்
|
ராகு
|
ராகுகலை
கமலினி |
பெட்ரோலியப்
பொறியியல் |
கேது |
ஞானிகலை
கமலினி |
மருத்துவ
விஞ்ஞானம் |
சித்தர் வாஸ்து
சாஸ்திரப்படி
ஒரு மருத்துவமனைக்கட்டிடத்திற்கு
வாஸ்து குறைகளை
நீக்கி வளன்களைக்கூட்டும்
லட்சணங்களின்
நிர்ணயம்
சித்தர்
வாஸ்து சாஸ்திரப்படி
ஒரு மருத்துவமனையின்
வாஸ்து குறைபாடுகளை
நீக்கி வளன்களைக்கூட்டுவதற்கு
அபூர்வ சித்தர்
குளிகை முறை காகபுஜண்டரால்
உபதேசிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளுக்கு
இரண்டு வகையான
சித்தர் குளிகைகளை
அம்மருத்துவமனையின்
பூசை அறையில் வைத்து
வணங்கவேண்டும்
என்று சித்தர்
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவதான சித்தர்
குளிகையின் (ரசமணியின்)
பெயர் “பூரண ஔடதக்கமலினி” என்பதாகும். இந்தவகை
பொதுவான சித்தர்
குளிகை அனைத்து
மருத்துவமனையிலும்
பொதுவாக வைத்து
வணங்கக்கூடியதாகும்.
இரண்டாவதான
சித்தர் குளிகை
அம்மருத்துவமனையின்
சிறப்பு சிகிச்சையை
அடிப்படையாகக்கொண்டு
நிர்ணயிக்கப்படவேண்டும்.
மருத்துவமனையின்
சிறப்பு சிகிச்சையை
ஆளும் கிரகத்தை
அடிப்படையாகக்கொண்டு
சிறப்பு நிலை சித்தர்
குளிகையை இரண்டாவது
சித்தர் குளிகையாகத்தேர்வுசெய்து
அச்சிறப்பு சிகிச்சையின்
சூட்சுமத்திற்குத்தக்கவாறு
மூலிகை சத்துக்களின்
சாரங்களை ஏற்றி
உரிய குளிகை (ரசமணி)
தயாரிக்கப்பட்டு
குரு தீட்சையேற்றப்பட்டு
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
முறையாக மருத்துவமனையின்
பூசை அறையில் வைத்து
வழிபாடு செய்யப்படவேண்டும்.
நவகிரகங்களின்
ஆளுகைக்குட்பட்ட
சிறப்பு மருத்துவ
சிகிச்சைகளை அடிப்படையாகக்
கொண்டு அமைக்கப்படவேண்டிய
சிறப்பு சித்தர்
குளிகைகள் மற்றும்
உதாரண சிறப்பு
சிகிச்சை பாகங்களின்
விவரங்களை நாம்
இப்பொழுது காணலாம்.
ஆளும்
கிரகம் |
சித்தர்
குளிகை |
உதாரண
சிகிச்சை பாகம் |
சூரியன்
|
ரவி
ஔடதக்கமலினி |
தலை |
சந்திரன்
|
மதி
ஓளடதக்கமலினி |
முகம் |
செவ்வாய் |
சேய்
ஓளடதக்கமலினி |
மார்பு |
புதன் |
புந்தி
ஔடதக்கமலினி |
முதுகு |
குரு
|
பொன்
ஔடதக்கமலினி |
வயிறு |
சுக்கிரன் |
பளிங்கு
ஔடதக் கமலினி
|
ஆண்(அ)பெண்குறி |
சனி |
காரி
ஔடதக்கமலினி |
துடைகள் |
ராகு
|
ராகு
ஔடதக்கமலினி |
கைகள் |
கேது |
ஞானி
ஔடதக்கமலினி |
கால்கள் |
சித்தர் வாஸ்து
சாஸ்திரப்படி
ஒரு தொழிற்கூடக்கட்டிடத்திற்கு
வாஸ்து குறைகளை
நீக்கி வளன்களைக்கூட்டும்
லட்சணங்களின்
நிர்ணயம்
சித்தர்
வாஸ்து சாஸ்திரப்படி
ஒரு தொழிற்கூடத்தின்
வாஸ்து குறைபாடுகளை
நீக்கி வளக்களைக்கூட்டுவதற்கு
அபூர்வ சித்தர்
குளிகை முறை காகபுஜண்டரால்
உபதேசிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கூடத்திற்கு
இரண்டு வகையான
சித்தர் குளிகைகளை
அத்தொழிற்கூட
பூசையறையில் வைத்து
வணங்க வேண்டும்
என்று சித்தர்
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவதான சித்தர்
குளிகையின் பெயர் “பூரண எந்திரக்கமலினி” என்பதாகும். இந்தவகை
பொதுவான சித்தர்
குளிகை அனைத்து
தொழிற்கூடங்களிலும்
பொதுவாக வைத்து
வணங்கக்கூடியதாகும்
இரண்டாவதான
சித்தர்குளிகை
அத்தொழிற்கூடத்தின்
சிறப்பு உற்பத்திப்பொருளை
அடிப்படையாகக்கொண்டு
நிர்ணயிக்கப்பட
வேண்டும். தொழிற்கூடத்தின்
பிரதான உற்பத்திப்பொருளை
ஆளும் கிரகத்தை
அடிப்படையாகக்கொண்டு
சிறப்பு நிலை சித்தர்
குளிகையை இரண்டாவது
குளிகையாகத்தேர்வு
செய்து அத்தொழிற்கூட
சிறப்பு உற்பத்திப்பொருளின்
சூட்சுமத்திற்குத்தக்கவாறு
மூலிகைச்சத்துக்களின்
சக்திகளை ஏற்றி
உரிய குளிகை (ரசமணி)
தயாரிக்கப்பட்டு
குரு தீட்சை ஏற்றப்பட்டு
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
முறையாக தொழிற்கூடத்தின்
பூசை அறையில் வைத்து
வழிபாடு செய்யப்படவேண்டும்.
நவகிரகங்களின்
ஆளுகைக்குட்பட்ட
தொழிற்கூடத்தின்
சிறப்பு உற்பத்தியை
அடிப்படையாகக்கொண்டு
அமைக்கப்பட வேண்டிய
சிறப்பு சித்தர்
குளிகைகள் மற்றும்
உதாரண உற்பத்திப்பொருள்களின்
விவரங்களை நாம்
இப்பொழுது காணலாம்.
ஆளும்
கிரகம் |
சித்தர்
குளிகை |
உதாரண
உற்பத்திப்பொருள் |
சூரியன்
|
ரவி
எந்திரக்கமலினி |
ஒளிரும்
விளக்கு |
சந்திரன்
|
மதி
எந்திரக்கமலினி |
பால் |
செவ்வாய் |
சேய்
எந்திரக்கமலினி |
அரிசி |
புதன் |
புந்தி
எந்திரக்கமலினி |
கணினி எந்திரம் |
குரு
|
பொன்
எந்திரக்கமலினி |
பொன்னாபரணம் |
சுக்கிரன் |
பளிங்கு
எந்திரக்கமலினி
|
வெள்ளியாபரணம் |
சனி |
காரி
எந்திரக்கமலினி |
கார்(சீருந்து) |
ராகு
|
ராகு
எந்திரக்கமலினி |
வெடிகுண்டு |
கேது |
ஞானி
எந்திரக்கமலினி
|
சாராயம் |
சித்தர் வாஸ்து
சாஸ்திரப்படி
ஒரு வணிகக்கட்டிடத்திற்கு
வாஸ்து குறைகளை
நீக்கி வளன்களைக்கூட்டும்
லட்சணங்களின்
நிர்ணயம்
சித்தர்
வாஸ்து சாஸ்திரப்படி
ஒரு வணிகக்கூடத்தின்
வாஸ்து குறைளை
நீக்கி வளன்களைக்கூட்டுவதற்கு
அபூர்வ சித்தர்
குளிகை முறை காகபுஜண்டரால்
உபதேசிக்கப்பட்டுள்ளது.
வணிகக்கூடத்திற்கு
இரண்டு வகையான
சித்தர் குளிகைகளை
அவ்வணிகக்கூடத்தின்
பூசை அறையில் வைத்து
வணங்க வேண்டும்
என்று சித்தர்
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவதான
சித்தர் குளிகையின்
பெயர் “பூரண ஸ்ரீ கமலினி” என்பதாகும். இந்த வகை
பொதுவான சித்தர்
குளிகை அனைத்து
வகை வணிகக்கூடங்களிலும்
பொதுவாக வைத்து
வணங்கக்கூடியதாகும்.
இரண்டாவதான
சித்தர் குளிகை
அவ்வணிகக்கூடத்தின்
சிறப்பு விற்பனைப்பொருளை
அடிப்படையாகக்கொண்டு
நிர்ணயிக்கப்படவேண்டும்.
வணிகக்கூடத்தின்
சிறப்பு விற்பனைப்பொருளை
ஆளும் கிரகத்தை
அடிப்படையாகக்கொண்டு
சிறப்பு நிலை சித்தர்
குளிகையை இரண்டவது
சித்தர் குளிகையாகத்தேர்வு
செய்து அவ்வணிகக்கூட
சிறப்பு விற்பனைப்பொருளின்
சூட்சுமத்திற்குத்தக்கவாறு
மூலிகைச்சத்துக்களின்
சக்திகளை ஏற்றி
உரிய சித்தர் குளிகை
(ரசமணி) தயாரிக்கப்பட்டு
குருதீட்சை ஏற்றப்பட்டு
குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு
முறையாக வணிகக்கூடத்தின்
பூசை அறையில் வைத்து
வழிபாடு செய்யப்படவேண்டும்.
நவகிரகங்களின்
ஆளுகைக்குட்பட்ட
வணிகக்கூட சிறப்பு
விற்பனைப்பொருளை
அடிப்படையாகக்கொண்டு
அமைக்கப்படவேண்டிய
சிறப்புச்சித்தர்
குளிகைகள் மற்றும்
உதாரண விற்பனைப்பொருள்களின்
விவரங்களை நாம்
இப்பொழுது காணலாம்.
ஆளும்
கிரகம் |
சித்தர்
குளிகை |
உதாரண
விற்பனைப்பொருள் |
சூரியன்
|
ரவி
ஸ்ரீ கமலினி |
ஒளிரும்
விளக்கு |
சந்திரன்
|
மதி
ஸ்ரீ கமலினி |
பால் |
செவ்வாய் |
சேய் ஸ்ரீ கமலினி |
அரிசி |
புதன் |
புந்தி
ஸ்ரீகமலினி |
கணிணினி
எந்திரம் |
குரு |
பொன்
ஸ்ரீ கமலினி |
பொன்னாபரணம் |
சுக்கிரன் |
பளிங்கு
ஸ்ரீ கமலினி |
வெள்ளியாபரணம் |
சனி |
காரி
ஸ்ரீ கமலினி |
கார்(சீருந்து) |
ராகு
|
ராகு
ஸ்ரீ கமலினி |
வெடிகுண்டு |
கேது |
ஞானி
ஸ்ரீ கமலினி |
மதுபானம் |
சித்தர் வாஸ்து
சாஸ்திரப்படி
ஒரு வரவேற்புக்கூடத்திற்கு
வாஸ்து குறைகளை
நீக்கி வளன்களைக்கூட்டும்
லட்சணங்களின்
நிர்ணயம்.
சித்தர் வாஸ்து
சாஸ்திரப்படி
ஒரு வரவேற்புக்கூடத்தின்
பூசை அறையில் “குரு கமலினி” என்னும் சித்தர்
குளிகையை வைத்து
வணங்கினால் அவ்வரவேற்புக்கூடத்திற்கு
உயர்ந்த புகழும்
பொருளும் சேர்வதோடு
பல சுப நிகழ்ச்சிகளும்
அவ்வரவேற்புக்கூடத்தில்
நிகழ்வதற்கான
வசிய ஈர்ப்பு ஆற்றல்
மேம்பட்டு உயர்வானப்பலன்கள்
ஏற்படும்.
குருமுகாந்திரமாக
முறையாகத்தயாரிக்கப்பட்ட
சித்தர் குளிகை
குரு தீட்சை ஏற்றப்பட்டு
முறையாகப்பயன்படுத்தப்பட்டால்
சர்வ வளன்களும்
ஏற்படுவது திண்ணம்.
சித்தர் வாஸ்து
சாஸ்திரப்படி
வெவ்வேறு வகையான
கட்டிடத்திற்கு
வாஸ்து குறைகளை
நீக்கி வளன்களைக்கூட்டும்
லட்சணங்களின்
நிர்ணயம்.
சித்தர் வாஸ்து
சாஸ்திரப்படி
வெவ்வேறு வகையான
கட்டிடத்திற்கு
வாஸ்து குறைகளை
நீக்கி வளப்படுத்தும்
மார்க்கங்கள்
சொல்லப்பட்டுள்ளது.
கட்டிடத்தின்
பிரதான பயன்பாட்டை
அடிப்படையாகக்கொண்டு
அப்பயன்பாட்டை
ஆளும் பிரதான கிரகத்தை
அடிப்படையாகக்கொண்டு
அதற்குண்டான சிறப்புச்சித்தர்
குளிகைகள் தயாரிக்கப்பட்டு
குருமுகாந்திரமாகப்பெற்று
பயன்படுத்தினால்
எல்லா வளன்களையும்
அடையலாம். கட்டிடத்தின்
பிரதான பயன்பாட்டிற்குத்தொடர்புடைய
குணங்களைக்கொண்ட
மூலிகைகளின் சக்திகளை
ஏற்றி முடிக்கப்பெற்ற
சித்தர் குளிகையை
தெய்வீக நம்பிக்கையோடு
பெற்று பயன்படுத்தினால்
குருவருளால் சர்வ
வளன்களும் ஏற்படும்
என்பது உண்மை.
சித்தர் வாஸ்து
சாஸ்திர சேவை பெறுவதற்குண்டான
விண்ணப்பம்
]zuº Áõìx \õìvµ ÷\øÁø¯¨ö£ÖÁuØPõÚ Âsn¨£¨£iÁ®
PõP¦áshº
S¸÷Põ°À £ØÔ¯
£µ[PøÍ¨
ö£Ó C[S öuõhÄ®
PõP¦áshº
S¸÷Põ°À Sh•ÊUS
ÂÇõ ¦øP¨£h[PÒ.
|
|
|
|