PõP¦áshº S¸÷Põ°À £ØÔ¯ £µ[Pøͨ ö£Ó C[S öuõhÄ®
PõP¦áshº S¸÷Põ°À Sh•ÊUS ÂÇõ ¦øP¨£h[PÒ.

C»Á\ |õi÷\õvh Âsn¨£®


£õìPµß S¸â & •Ø¤Ó¨¦ µP]¯[PÒ

Sre Bhaaskharan Gurujiதொண்டை நன்னாடு சான்றோருடைத்துஎன்று பெரியோர்களால் வழிவழியாகப் புகழப்பட்டுவரும் தொண்டை நன்னாட்டில் (தமிழ்நாட்டின் வடக்கு பாகம்) முக்தி தரும் நகர் ஏழனுள் முதலாம் காஞ்சி மாநகருக்கு (காஞ்சிபுரம்) தென்மேற்கில் அமைந்துள்ள தெய்வீகத்திருத்தலமாம்சுமங்கலிஎன்னும் சிற்றூரின் மைந்தனாக மங்களம் பொருந்திய தமிழாண்டாம் கீலகவாண்டில்; மகரத்திங்களாம் தைத்திங்களில்; மூன்றாம் நாளில்; உழவர் திருநாளாம் காணும் பொங்கல் திருநாளில்; குருவாரமாம் வியாழக்கிழமையில்; இந்திய தேச நேரப்படி காலை 10-30 மணிக்கு; மூல நட்சத்திரமும், தனுசு ராசியும், மீன லக்கினமும், பல்வேறு விதமான ராஜ யோகங்களும் கொண்ட நல்வேளையில் ஆங்கில வழிப்படி 1969-ம் ஆண்டு, சனவரித்திங்கள், 16-ம் நன்னாள், காலை 10-30 மணிக்கு, கிழக்கு தீர்க்காம்சம் 79யி-50‘ ம்; வடக்கு அட்சாம்சம் 12யி-50‘ ம் நிறைந்த பூமியில் திரு அவதாரம் செய்தார்.

 

சம்புகமுனிவரின் கோத்திரமாகிய வன்னியர் குலமரபிலே சு.பொ. இராமகிருஷ்ணகவுண்டர் அவர்களுக்கும் அவர்தம் துணைவியார் இரா. குப்பம்மாள் என்னும் நல்லாளுக்கும் மூத்த மலராகபாஸ்கரன்என்னும் இயற்பெயர் கொண்ட பாஸ்கரன் குருஜிஇந்த பூமியில் திருஅவதாரம் செய்தார்.

 

Parents of Sre Bhaaskharan Guruji இந்துமத வழக்கின்படி முதல் பிரசவம் பெண்ணின் தாய் வீட்டில் நடைபெற வேண்டும் என்கிற நியதிப்படி பாஸ்கரன் குருஜியின் தாய்வழிப்பாட்டி வீடானசோதியம்பாக்கம்என்னும் சிற்றூரில்பாஸ்கரன் குருஜிபிறந்தார். இவர் பிறந்த நல்வேளை காணும் பொங்கல் தினமாதலால் தெய்வீக ஓசையில் ஒன்றாகிய பறை யோசை ஒலித்து வாழ்க! வாழ்க!! என்று ஆசீர்வதிப்பதுபோல் இயற்கை நிமித்தியம் காட்டியது.

 

பாஸ்கரன் குருஜி - இளமைக்காலம்

 

பாஸ்கரன் குருஜி அவர்கள் தன் தாய் தந்தையரான சு.பொ. இராமகிருஷ்ணகவுண்டர் மற்றும் இரா. குப்பம்மாள் தம்பதியினரால் சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டார்.  இவர் பிறந்தபொழுது விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த இவர்தம் குடும்பம் இவரின் பிறப்பிற்குப்பிறகு நாளுக்குநாள் வளர்ச்சிக்கண்டது. இவர்தம் தந்தையார் சு.பொ. இராமகிருஷ்ணகவுண்டர் அவர்களுக்கு அரசாங்கத்தில் ஆசிரியர் வேலையும் கிடைத்தது.

இவர்தம் தந்தைவழிப்பாட்டனார் சு.இரா.பொன்னுசாமிகவுண்டர் அவர்களின் நீதி போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பாஸ்கரன் குருஜி தம் மூன்றாவது வயதில்சுமங்கலிகிராமத்தில் பாலர் பள்ளிக்கல்வியைத்தொடங்கினார். தன்னுடைய ஐந்தாம் வயதில்சுமங்கலி  கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்து படித்தார். நான்காம் வகுப்புவரை இப்பள்ளியில் பயின்றார்.  இளம் வயதிலேயே கல்விக்கேள்விகளில் தலைசிறந்து விளங்கி அனைத்து ஆசிரியர்களாலும் பாராட்டப்பெற்றார். 

 

Paternal Grand Father of Sre Bhaaskharan Guruji குடும்பச்சூழ்நிலைகளின் காரணமாக இவர்தம் குடும்பம் 1978-ஆம் ஆண்டுபிரம்மதேசம்என்னும் மற்றொரு ஊருக்குக்குடிபெயர்ந்தது.  பாஸ்கரன் குருஜி அவர்கள் தமது ஐந்தாம் வகுப்பை பிரம்மதேசம் அரசினர் ஆரம்பப்பள்ளியில் பயின்றார்.  பிறகு ஆறாம் வகுப்பையும் அதனைத்தொடர்ந்து ஏழாம் வகுப்பின் ஒரு பகுதியையும்பிரம்மதேசம்அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.  தன் பாட்டனாரின் அரவணைப்பினால் இளமையிலேயே தெய்வீகபக்தி கொண்டவராக பாஸ்கரன் குருஜி வளரத்தொடங்கினார்.  குடும்பச்சூழ்நிலையின் காரணமாக இவர்தம் குடும்பம் 1980 - ஆம் ஆண்டு இவர்தம் தாய்வழிப்பாட்டியின் ஊரானசோதியம்பாக்கம்என்னும் சிற்றூருக்குக்குடிபெயர்ந்தது. தாய்வழிப்பாட்டனார் மற்றும் பாட்டியாரின் கூடுதலான அரவணைப்பில் பாஸ்கரன் குருஜி இன்பமான சூழ்நிலையில் வளரலானார்.

 

தன்னுடைய ஏழாம் வகுப்புக் கல்வியை மாமண்டூர் (தூசி-மாமண்டூர்) அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார்.  இவரின் அறிவாற்றல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டடே வந்தது.  தமது எட்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் நடைபெறும்சிறப்புத்திறன்தேர்வில் வெற்றி பெற்று அதற்குண்டான அரசினர் கல்வி உதவித்தொகையையும் தமது பத்தாம் வகுப்பு வரை பெற்றார். ஒன்பதாம் வகுப்புப்பயிலும்போதே பள்ளியின் மாணவத்தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அப்பதவி வகித்தார்.பள்ளியில் இலக்கிய மன்றம் ஏற்படுத்தி கலைநயமான சொற்பொழிவுகளை ஆற்றி சக மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நன்மதிப்பை பெற்றார்.  பாடக்கருத்துக்களை மையமாக வைத்து தமது சொந்தக்கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டே தேர்வுகளை சந்திக்கும் இயல்புடையவராக குருஜி அவர்கள் திகழ்ந்தார்.  ஆசிரியர்களிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்கும் சுபாவம் கொண்டவராதலால் குருஜி அவர்களைக்கண்டால் வகுப்பை நடத்தும் ஆசிரியர்களுக்கு எப்பொழுதும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து முதல் மாணவனாகவே திகழும் சிறப்பை குருஜி அவர்கள் பள்ளிக்கல்வியில் பெற்றிருந்தார்.

 

பாஸ்கரன் குருஜி - உயர்கல்வி

பள்ளிக் கல்வியை 1984 - ஆம் ஆண்டு, மார்ச்சுத்திங்கள், சிறந்த மதிப்பெண்களுடன் முடித்த குருஜி அவர்கள் 1984 - ஆம் ஆண்டு; ஆகஸ்டுத்திங்கள்; 15-ம் நன்னாள் ஆன்மீகத்திற்குப்புகழ்பெற்றஆதிபராசக்தியின்பீடமாகத்திகழும் மேல்மருவத்தூரில் அமைந்துள்ளஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்விப்பயிலகத்தில்தொழில் நுட்பக்கல்வியைத்தொடர்ந்தார். விடுதியில் தங்கி படித்த குருஜி அவர்களின் ஆன்மீகப்பசிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நல்விருந்தாகியது.  தினமும் காலையும் மாலையும் அன்னை ஆதிபராசக்தியை வழிபட்டு ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளாரின் அருளாசியோடும் கல்வியைத்தொடர்ந்தார். கனவிலும் நினைவிலும் அருள்கடாட்சங்களை அன்னை ஆதிபராசக்தியால் பெற்று பிற்காலத்தில் ஆன்மீக உலகில் பெரும் சாதனையாளராகத்திகழ்வதற்குண்டான வித்துகளை பெற்றுக்கொண்டார்.  1987 - ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள்அமைப்புப்பொறியியல்  துறையில் முதல்நிலை பட்டயம் பெற்றார். தனது பட்டயத்தை அடிகளாரின் பாதங்களில் விழுந்து வணங்கிப்பெற்றுக்கொண்டதை நினைத்து குருஜி அவர்கள் அடிக்கடி மகிழ்ச்சி கொள்ளுவதுண்டு.

 

பாஸ்கரன் குருஜி - தெய்வீக வாழ்க்கை

1987 - ஆம் ஆண்டு முதல் 1990 - ஆம் ஆண்டு வரை பல கோயில்களுக்குச்சென்று இறைவழிபாடு செய்து தம் ஆன்மீக  அனுபவத்தை குருஜி அவர்கள் வளர்த்துக்கொண்டார். இடையிடையே தொழில் நுட்பத்தொடர்புடைய தற்காலிக வேலைகள் பலவும் கண்டு வாழ்ந்தார். பலசித்தர் நூல்களையும்; இலக்கிய நூல்களையும் கற்று தம் அனுபவங்களை குருஜி அவர்கள் வளர்த்துக்கொண்டார். கனவு முகாந்திரமாக பலமுறை காட்சிக் கொடுத்தகாகபுஜண்டர்  என்னும் முனிவரை தம்குருவாக அடையாளங்கண்டு அவர்தம் ஞான நூல்களைக்கற்கலானார்.           

 

குடும்பத்தின் மூத்தபிள்ளையானதாலும்; தனக்குப்பின் பிறந்த மூன்று தம்பிமார்களின் கல்வியை மேம்படுத்துவது தம் கடமையானதாலும் குருஜி அவர்கள் தன்னுடைய அயராத உழைப்பின் பயனாக சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் களப்பொறியாளராக பணியில் அமர்ந்தார்.  உயர்தர சாலைகளின் கட்டுமானப்பணிகளில் சிறந்த பொறியாளர் என்னும் பெயருடன் தனியார் நிறுவனத்தில் சிறப்பாகப்பணியாற்றினார்.  தம் தொழில் வாழ்வில் அரசாங்கப்பொறியாளர்களோடு தொடர்பு கொண்டு தம் பணியைத்தொடர்வதில் ஏற்படும் அதர்மங்களைக்கண்டு மனவருத்தமும் வியப்பும் கொண்டார்.  இந்நிலையில் நாளுக்குநாள் தெய்வீகப்பயிரும் செழுமையாகச் செழித்து வளர்ந்து கொண்டே வந்தது.  தர்ம எண்ணம் கொண்ட குருஜி அவர்கள் 1992 - ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொறியாளர் பணியைத் துறந்தார்.

 

பாஸ்கரன் குருஜி - திருமண வாழ்க்கை

இல்லறமே நல்லறம்என்பதை உணர்ந்த குருஜி அவர்கள் தன் ஒன்று விட்ட மாமன் மகளான செல்வி. ரேவதியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.  இறையருளாலும் குருவருளாலும் மங்களகரமான தமிழாண்டு ஆங்கிரச ஆண்டு; ஆனித்திங்கள்; 22-ம் நன்னாள்; திங்கள் கிழமை; சப்தமி திதி; உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்கினம் கூடிய நல் வேளையில் பாஸ்கரன் குருஜி தன் மனையாள் ரேவதியை மணங்கண்டார்.  ஆங்கில வழிப்படி 1992 - ஆம் ஆண்டு; சூலைத்திங்கள் 6 -ம் நன்னாள் (6-7-1992) அன்று திருமணம் மிகக்கோலாகலமாக காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

 

Sre Bhaaskharan Guruji and Mrs Revathi Guruji

           

பாஸ்கரன் குருஜி அவர்கள் பிறந்த சிற்றூராம்சோதியம்பாக்கம்மண்ணில்தான் அவர்தம் துணைவியார் ரேவதி அவர்கள் சி.கணேசகவுண்டர் -பாஞ்சாலையம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகளாக அவதாரம் செய்தார்.  மங்களகரமான தமிழாண்டு பிரம்மாதீச ஆண்டு; ஆவணித் திங்கள்; 30-ம் நன்னாள்; சனிக்கிழமை; இந்திய சுதேச நேரப்படி காலை 7-50 மணிக்கு ரேவதி நட்சத்திரமும்; மீன ராசியும்; கன்னி லக்கினமும்; பல்வேறுவிதமான யோகங்களையும் கொண்ட நல்வேளையில் ஆங்கில வழிப்படி 1973 - ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், 15-ம் நன்னாள், காலை 7-50 மணிக்கு (15-9-1973) பிறந்தார்.

திருமண வாழ்வின் பயனாக மூன்று பெண் மகவுகளை பாஸ்கரன் குருஜி - ரேவதி தம்பதியினர் ஈன்றெடுத்தனர். முதல் குழந்தைக்கு தனலட்சுமி என்றும்; இரண்டாம் குழந்தைக்கு குருலட்சுமி என்றும்; மூன்றாம் குழந்தைக்கு யோகலட்சுமி என்றும் பெயரிட்டு அன்புடனும் அருளுடனும் பண்புடனும் வளர்த்து வருகின்றார்கள்.

Bhaaskharan Guruiji's Daughters

பாஸ்கரன் குருஜி - நாடிசோதிடர்

 

அருளாட்சிக்கொண்ட அருள்குரு காகபுஜண்டரின் குருவருளால் அவர்தம் பிரதானச்சீடரான கோரக்கரின் ஆட்சிக்குட்பட்ட  தென் தமிழ்நாட்டில் அமைந்துள்ள கொல்லி மலைக்குச்செல்லும் பாக்கியம் குருஜி அவர்களுக்கு ஏற்பட்டது.  கொல்லிமலையில் அறம்பாடியம்மன் உடனுறை அறப்பள்ளீஸ்வரரை வணங்கி சிறிது நேரம் ஆலயத்திற்கு எதிரே கண்துயின்றபொழுது குருஜி அவர்கள் ஒரு கனவு கண்டார்.  அருள்குரு கோரக்கர் கனவில் தோன்றி கொல்லிமலையின் ஒருபகுதியானகோரக்கர் குண்டம்என்னும் தெய்வீக இடத்தில் அருள்குரு காகபுஜண்டரால் கோரக்கருக்கு உபதேசிக்கப்பட்ட தெய்வீக ரகசியங்கள் அடங்கிய ஓலைச்சுவடிக்கட்டுகள் இருப்பதையும் அதை குருஜி அவர்களுக்கு கொடுப்பதற்கு கோரக்கர் சித்தமாக இருப்பதையும் கனவின் மூலம் அறிந்து கொண்ட குருஜி அவர்கள் குருவருளாணைப்படி கோரக்கர் குண்டத்தை அடைந்து தெய்வீக ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்தார். பிறகு ஓலைச்சுவடிகளுடன் தன்னில்லம் சேர்ந்த குருஜி அவர்களுக்கு தொடர்ந்து ஏழு நாட்கள் அருள் குரு காகபுஜண்டர் கனவில் தோன்றி ஓலைச்சுவடியை படிப்பதற்குண்டான குரு உபதேசங்களை வழங்கினார்.  தொடர்ந்து வந்த மார்கழித் திங்கள் திருவாதிரை நட்சத்ததிரம் கூடிய ஆருத்ரா பௌர்ணமி தினத்தில் ஏழுவகையான ஞான தீட்சைகளையும் காகபுஜண்ட முனிவர் குருஜி அவர்களுக்கு கனவின் மூலம் அருளினார்.

         

1993-ஆம் ஆண்டு சனவரித்திங்கள் முதல் தன் வீட்டிலிருந்தபடியே நாடிசோதிடக்கலையை இவ்வுலகிற்கு உணர்த்தும் கடமையை குருஜி அவர்கள் செய்து வந்தார். பொதுமக்களின் ஆதரவு காகபுஜண்டர் நாடிக்கு அதிகமாகப்பெருகிய காரணத்தால் 1994 -ம் ஆண்டு காஞ்சிபுரத்தில்ஸ்ரீ காகபுஜண்டர் நாடி சோதிட ஆராய்ச்சி நிலையம்என்னும் குருபீடம் ஆரம்பித்து தெய்வீகச்சேவைகள் செய்யலானார். தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், வடநாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டினரும்பாஸ்கரன் குருஜிவாயிலாக ஸ்ரீ காகபுஜண்டர் நாடி சோதிடத்தின் பலன்களைப் பெற்று இன்பம் கொள்ளலானார்கள். ‘சோதியம்பாக்கம்கிராமத்தில் வசித்தபடியே காஞ்சீபுரத்தில் தெய்வீகத்தொழில் செய்து கொன்டு குருஜி அவர்கள் வளரலானார். 1998 - ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 23-ம் நன்னாள் அருள்குரு காகபுஜண்டர் கனவில் வந்து ஆசீர்வதித்துச்சொன்ன தெய்வீக அருள்மொழிப்படி பெருந்தொகை ஒன்று குருஜி அவர்களுக்கு அரசாங்கத்தால் பரிசாக வழங்கப்பட்டது.  குருஜி அவர்களின் வாழ்க்கைத்தரம் குருவருளால் உயர்ந்தது. சோதியம்பாக்கத்தை விட்டு தான் புதியதாகக்கட்டிய காஞ்சிபுரம் இல்லத்தில் தன் மனைவி மக்களுடன் குருஜி அவர்கள் குடியேறினார்கள், ஸ்ரீ காகபுஜண்டர் நாடி சோதிட நிலையத்தின் அலுவலகத்தை தம் புதிய இல்லமான 77, அறிஞர் அண்ணா தெரு, கச்சபேஸ்வரர் நகர், (குருகோவில் எதிரில்)  பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்-1. என்கிற முகவரிக்கு மாற்றினார்.

 

பாஸ்கரன் குருஜி - வாஸ்து சாஸ்திர நிபுணர்

காகபுஜண்டரின் தெய்வீக ஓலைச்சுவடிகளின் வழியாகஸ்ரீ காகபுஜண்டர் மனை லட்சணாமிர்தம் - 7000‘ என்கிற நூலைக்கண்டெடுத்த பாஸ்கரன் குருஜி அவர்கள் வாஸ்து சாஸ்திரத்தின் ஒரு பகுதி மட்டும் இவ்வுலகோர் அறிய வாழ்வதைக்கண்டார்.சித்தர்களின் உயர் கலைகளில் ஒன்றான தெய்வீகக்கட்டிட சாத்திரத்தின் முழு விளக்கங்களை இவ்வுலகோர் அறியும் பொருட்டு தம் சொந்த செலவில் தனியார் தொலைக்காட்சியில் ஆறு வாரங்கள் உரையாற்றி பொதுமக்களிடம் பெரும்புகழ் பெற்றார்.  தொடர்ந்து நாடி சோதிடச்சேவையை உலகிற்கு ஆற்றிக்கொண்டிருக்கும் குருஜி அவர்கள் அதன் ஒரு பகுதியாகஸ்ரீ காகபுஜண்டர் மனை லட்சணாமிர்தம்-7000‘ என்னும் ஓலைச்சுவடி நூலின் முக்கிய ரகசியங்களைத்தொகுத்துஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் வாஸ்து சாஸ்திரம்‘ - முதல் பாகம் என்று தலைப்பிட்டு முக்கியமான ஆயிரம் பாடல்களின் சாராம்சங்களை விளக்கப்படங்களுடன் எழுதி தமிழ் மொழியில் புத்தகமாக வெளியிட்டார். குருஜியின் புத்தகம் மக்களின் பூரண வரவேற்பைப்பெற்று பல ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாயின.

 

பாஸ்கரன் குருஜி - இணையப்புகழ்

 

நாடி சோதிட சாத்திரத்தின் பேருண்மையை இவ்வுலகம் கண்டு களித்து அதன் முழுபலனைப் பெறவேண்டும் என்பதற்காக 1998 - ஆம் ஆண்டு; நவம்பர் திங்கள்; 3-ம் நன்னாள்; அகில உலக இணைய வெப்தளத்தில் தனது சொந்த வெப்தளமான காகபுஜண்டர்.காம் என்னும் வெப்தளத்தை அறங்கேற்றினார். தனது சொந்த வெப்தளத்தின் மூலம் பிரசன்ன பிரச்சனை காண்டம் வழியில் இலவச நாடி சோதிட சேவையையும் குருஜி அவர்கள் செய்து கொண்டு வருகின்றார். காகபுஜண்டரின் பதினெட்டு காண்டங்கள் மற்றும் ஒரு சிறப்புக்காண்டமாகியபிரசன்ன பிரச்சனை காண்டம்ஆகியவைகளைக் கொண்ட கட்டண சேவையையும் ஆற்றிக்கொண்டு பெரும்புகழ் பெற்று வாழ்ந்து கொண்டு வருகின்றார்.

கி.பி.2000- ம் ஆண்டில்மலேசிய மக்களின்வேண்டுகோளுக்கிணங்கி மலேசிய நாட்டிற்கு விஜயம் செய்து ஒரு மாத காலம் அங்கு தங்கி நாடி சோதிட சேவையையும் ஆசீர்வாதத்தையும் மலேசிய மக்களுக்கு வழங்கி பெரும்புகழ் பெற்று தம் தாயகம் திரும்பினார்.

 

பாஸ்கரன்குருஜி - நாடகக்கலைஞர்

    

 

பழம்பெரும் கலைகளில் ஆர்வம் கொண்ட குருஜி அவர்கள் தமிழகத்தின் பழம்பெரும் தெய்வீகக் கலைகளுளொன்றானகட்டைக்கூத்துஎனப்படும் கலையில் சிறந்த விற்பன்னராவார்.  தன்னுடைய தாய்வழிப்பட்டனார் குடும்பத்தினர் கட்டைக்கூத்துக்கலையில் புகழ் பெற்றவர்கள் ஆதலால் இளமையிலிருந்தே கட்டைக்கூத்துக்கலையில் மிகு ஆர்வம் கொண்ட குருஜி அவர்கள் மகாபாரதக்கதையை ஒட்டிய கட்டைக்கூத்துக்களில் கர்ணன், கிருஷ்ணன் மற்றும் அர்ச்சுனன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றார். தான் வாழும் காஞ்சிபுரம் நகரத்திலேயேஅருச்சுனன் தவநிலைநாடகத்தில்அருச்சுனனாகநடித்து தவக்கோலக்காட்சியை பெரிதாக அரங்கேற்றி புகழும் இன்பமும் பெற்றார் குருஜி. தொடர்ந்துஅரிச்சந்திரன்நாடகத்தை பல ஊர்களில் நடத்திக்கொண்டுசத்தியத்தையும் தர்மத்தையும்பின்பற்றி பொதுமக்கள் வாழ வழிவகுத்து வருகிறார் பாஸ்கரன் குருஜி.

 

 

பாஸ்கரன் குருஜி - தெய்வீகச்சேவைகள்

சேவையை தன் உயிர் மூச்சாகக்கொண்டு வாழும் குருஜி அவர்கள் 1998-ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு சேவை அமைப்பான அரிமா சங்கத்தில் உறுப்பினராகி சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்கிறார். காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற அரிமா சங்கங்களில் ஒன்றானகாஞ்சிபுரம் பல்லவன் நகர அரிமா சங்கத்தில்பல பதவிகளை வகித்து தொடர்ந்து அரிமா சேவையை ஆற்றிக்கொண்டு வருகிறார் பாஸ்கரன் குருஜி.

           

இவ்வுலகில் பல தர்மப்பணிகள் செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் குருவருளாணைப்படி கி. பி. 2000 - ஆம் ஆண்டில்ஸ்ரீ காகபுஜண்டர் சிவப்பணி அறநிலைஎன்னும் அறநிலையத்தை நிறுவிய குருஜி அவர்கள் தாமே அறநிலையின் மேலாண்மை அறங்காவலராகப் பணியாற்றிக்கொண்டு தான் நிர்வகிக்கும் அறநிலையின் மூலம் இதுவரை ஒன்பது அரிச்சந்திரன் ஆலையங்களைக்கட்டி திருக்குட நன்னீராட்டுவிழா செய்துள்ளார்.

Harichandara Temple

Harichandra Temple Doner's Details

இவையன்றி பல சிவாலயங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா செய்துள்ளார். கோதானம், ஆடைதானம் மற்றும் அன்னதானம் போன்ற பலதர்மப்பணிகளையும் தன் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்கி குருஜி அவர்கள் செய்துள்ளார். 

           

சிவாலயத்திருப்பணிகளில் அதிக ஆர்வம் கொண்ட குருஜி அவர்கள்ஸ்ரீ காகபுஜண்டர் சிவாகம சாஸ்திரம்என்னும் ஓலைச்சுவடி நூலை அடியொற்றி பல சிவாலயங்களை புதுவிதமாக உயர்வான பலன்களை உலகிற்குக்கொடுக்கக்கூடியதாக ஏற்படுத்த திட்டமிட்டிருக்கின்றார்கள். அதன் முதல்படியாக தாம் வளர்ந்து வாழ்ந்தசோதியம்பாக்கம்என்னும் சிற்றூரில் குருவருள் கனவின் மூலம் வழங்கிய அருளாணைப்படிஅருள்மிகு பகுளேஸ்வரி சமேத ஸ்ரீ காகபுஜண்டீஸ்வரர்திருக்கோயில் அமைக்க அடிக்கல் நாட்டியிருக்கின்றார்கள்.  பல லட்சம் ரூபாய் செலவில் கருங்கற்களைக்கொண்டு முதல் தரமான சிவாலயத்தை இவ்வுலகில் இதுவரை எங்கும் இல்லாத கட்டிட அமைப்பு முறைகளுடன் சித்தர் ஆகம சாஸ்திரத்தோடுசித்தர் மனை லட்சணாமிர்தம்நூலின் முழு அம்சங்களை அடக்கியதாய் திருக்கோயில் அமைக்க எண்ணம் கொண்டுள்ளார்கள். குருவருளால் நல்லெண்ணம் கொண்ட தர்ம சிந்தனையாளர்கள் இத்திருப்பணிக்காகஸ்ரீகாகபுஜண்டர் சிவப்பணி அறநிலைக்கு நன்கொடைகள் அளித்தால் சிவப்பணி விரைவில் முடிக்கப்பெற்று திருக்குட நன்னீராட்டு விழாவைக்காண்பது திண்ணம். தற்காலம் ஆகம சாஸ்திரத்தின் ஒரு பகுதி லட்சணங்களை மட்டும் கொண்டு கட்டப்பட்டு சிதலமடைந்திருக்கும் பல சிவாலயங்களையும் சீர்திருத்தி அந்தந்த தலத்திற்குரிய தெய்வீக  லட்சணங்களுடன்; அந்தந்த தலத்திற்குண்டான தெய்வீக சரித்திரத்தை வெளிப்படுத்தும் வித்தியாசமான கட்டிட அமைப்புகளுடன் ஆலயங்களை திருப்பணி செய்துசிவாகம சாஸ்திரத்தில்ஒரு சாதனை படைக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் குருஜி அவர்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.

Bhaaskharan Guruji and Revathi Guruji in Prayer room

குருஜி அவர்களின் உயர்வான எண்ணத்தை பயன்படுத்தி தெய்வீகப்பணி செய்ய விரும்புவோர் நேரடியாக அணுகி சிவாகம  விளக்கங்களை முறையாகப்பெற்றுசித்தர் சிவாகம முறைப்படிஆலயங்கள் அமைத்து தெய்வீக அருளின் பெரும்பலன்களை இவ்வுலகில் பெறவேண்டும் என்பதே குருஜியின் எண்ணம்.  பல தெய்வீகப் புத்தகங்களை எழுதி இவ்வுலகிற்கு வெளியிடவேண்டும் என்கிற பேராசையும் குருஜிக்கு உண்டு

 

பாஸ்கரன் குருஜி - முற்பிறப்பு ரகசியங்கள்

காகபுஜண்டரின் ஓலைச்சுவடியின்படி பாஸ்கரன் குருஜி அவர்களுக்கு இது 470-ஆவது பிறவியாகும். துவாபரயுகத்தில் கர்ணனாகத்திருஅவதாரம் செய்து காகபுஜண்டரின் நேரடி உபதேசத்தை குருஜி அவர்கள் பெற்றுள்ளார்கள் என்பது ஒரு அமிர்தமான செய்தியாகும். மகாபாரதக்காலத்தில் கர்ணனாக அவதரித்த போது மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ணனின் பெரும்பாலான அங்கலட்சணங்களும் கிரக அமைப்புகளும் தற்போதைய 470 - ஆவது பிறவியிலும் தொடர்கின்றது என்பது பேருண்மை.

           

குருஜி அவர்கள் தமது 450 - ஆவது பிறவி முதல் கடைசியாகக்கடந்த 469-ஆவது பிறவி வரை பல ஆயிரம் ஆலயத்திருப்பணிகள் செய்துள்ளார்கள் என்கின்ற விவரமும் காகபுஜண்டரின் ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளது. சிவாகம சாத்திரத்தில் பன்பொழிப்புலமை பெற்று பல பிறவிகளில் பலருக்கு குரு உபதேசங்கள் வழங்கியிருக்கிறார்கள். தமது 454 -ஆவது பிறவியில் ஜப்பான் நாட்டில் பிறந்து பல புத்த ஆலயங்களின் திருப்பணிகளை செய்துள்ளார்கள்.  அதன் தொடர் வினையாக ஒரு சிறந்த புத்த ஆலயத்திருப்பணியையும் தமது 470-ஆவது பிறவியான இப்பிறவியில் குருஜி அவர்கள் செய்யப்போகின்றார் என்கிற விவரமும் காகபுஜண்டரின் ஓலைச்சுவடி வாயிலாய் கண்டறியப்பட்டுள்ளது.  கற்பக விருட்சமாம் காகபுஜண்டரின் குருவருள் நிழலில் அமர்ந்து பூரண தர்மங்களைச்செய்ய கலியுகத்தில் தற்காலம் அவதரித்துள்ள பல குருமார்களுள் ஒருவராக குருவருளால் குருஜி அவர்கள் அவதரித்துள்ளார்கள் என்பது பேருண்மை.


PõP¦áshº S¸÷Põ°À £ØÔ¯ £µ[Pøͨ ö£Ó C[S öuõhÄ®
PõP¦áshº S¸÷Põ°À Sh•ÊUS ÂÇõ ¦øP¨£h[PÒ.

C»Á\ |õi÷\õvh Âsn¨£®


 

 

 

 

www.nadireader.org

www.kagabujandar.org

www.nadiastrologer.org

 

 

info@nadireader.org

info@kagabujandar.org

info@nadiastrologer.org